கனம் Rev. ARGST. பர்னபாஸ் அவர்கள் சபை மன்றத்திலும், திருமண்டலத்திலும் அனுமதி பெற்று சபை ஆரம்பிக்க மிகுந்த மகிழ்ச்சியோடு அனுமதியளித்தார்கள்.
புதிய ஆலய ஆராதணை 27.06.1993 அன்று ஞாயிறு மாலை 7.00 மணிக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. மேற்குசபை மன்றத்தலைவர் Rev. P. தேவதாசன் அவர்கள் ஆசீர்வாத செய்தி (ஆதி.12-22) அளித்து ஆசீர்வதித்து ஜெபித்தார்கள். அந்த திருவிருந்து ஆராதனை முடிந்தபின்பு முதல் சபைக் கூட்டம் சேகர செயலாளர் சகோ. D. தனராஜ் அவர்கள் ஜெபித்து ஆரம்பமானது. சேகர குருவானவர் Rev. ARGST. பர்னபாஸ் அவர்கள் புதிய திருச்சபை ஆவிக்குரிய வளர்ச்சி, சரீர வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியும் அடைய ஆலோசனை வழங்கினார்கள்.
கீழ்க்கண்ட நபர்கள் முதலாவது நிர்வாக கமிட்டி அங்கத்தினர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
1. திரு. A. சுவாமிதாஸ்
2. திரு. J. தேவதாசன்
3. திரு. J. ராஜையா ஏசுவடியான்
4. திரு. A. சுகுமார்பால்ராஜ்
5. திரு. S. பால்ராபர்ட்
6. திரு. J. ஆல்பர்ட்கிருபாகரன்
7. திரு. N.A. அருள்செல்வராஜ்
8. திரு. J. மனோகரன் சாமுவேல்
9. திரு. P. தேவராஜ்
10. திரு. P.M.D. விஜயகுமார்
11. திரு. M. ஹரிபாலகிருஷ்ணன்
12. திரு. M.P. அந்தோணிபாபு
13. திரு. P. மனுவேல்ராஜ்
14. திரு. R. ஜோசப்
கமிட்டி உறுப்பினர்களால் கீழ்க்கண்ட சபை பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
1. திரு. J. தேவதாசன் – காரிய தரிசி
2. திரு. A. சுவாமிதாஸ் – உதவிகாரியதரிசி
3. திரு. J. ராஜையா ஏசுவடியான் – பொருளாளர்
4. திரு. N.A. அருள்செல்வராஜ் – தணிக்கையாளர்
5. திரு. A. சுகுமார் பால்ராஜ் – தணிக்கையாளர்
04.07.1993 ஞாயிறு ஆராதனை முடிந்த பின்பு நடந்த நிர்வாக கமிட்டி கூட்டத்தில் புதிய ஆலயத்திற்கு தூய யோவான் ஆலயம் என்று பெயரிட ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின்பு செயலாளர் பொறுப்பு வகித்த திரு J. தேவதாசன் அவர்கள் தன்னுடைய சொந்த பணியினிமித்தமாக விடுப்பு எடுத்துக்கொண்டதால் திரு. A. சுகுமார்பால்ராஜ் அவர்களை செயலாளராக சபை பொதுக்குழுவில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபை மக்களின் ஊக்கமான ஜெபத்தில் ஆலயம் கட்ட 20 சென்டு இடமாவது வேண்டும் என தேவனிடத்தில் கேட்டார்கள்; ஜெபத்தை கேட்ட தேவன் அகஸ்தியர்பட்டிக்கும் பொன்னகருக்கும் நடுவே சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் 85 சென்டு நிலம் திரு. T. தங்கவசனம் அவர்களிடம் வாங்க கிருபை செய்தார். எனவே தேவன் கொடுத்த நிலத்தில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என சபை மக்கள் ஜெபித்த போது அந்த நிலத்தில் முதன்முதலாக தென்னை ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறிய ஆலயம் கட்டவும், அந்த ஆலயத்திற்கு ‘தூய யோவான் ஆலயம்’ என பெயர் சூட்டவும் தேவன் கிருபை செய்தார். இந்த ஆலயம் கட்டும் பணியில் பல பணிகளை சபை விசுவாசிகளே நேரடியாக செய்ய தேவன் பெலன் கொடுத்தார்.
சிறிய ஆலயம் கட்டப்பட்டிருந்தாலும் விசுவாசிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் கீழ்க்கண்ட தேவ பணிகளும் சிறப்பாக நடைபெற்றது.
1. ஓய்வு நாள்பாடசாலை ஊழியங்கள்
2. விடுமுறை வேதாகமப்பள்ளி ஊழியங்கள்
3. முழு இரவு ஜெபம்
4. வீட்டு ஜெபக்கூட்டங்கள்
5. சுவிசேஷ ஊழியங்கள், கிராம ஊழியங்கள்
6. கன்வென்ஷன்கள், இலவச மருத்துவ முகாம்கள்
7. உள்ளுர், வெளியூர் தியானக்கூட்டங்கள்
8. ஆண்கள், பெண்கள், வாலிப ஆண்கள், வாலிப பெண்கள் ஐக்கிய ஊழியங்கள்
9. மிஷனரிகளை தாங்கும் ஊழியங்கள்
பின்னர் ஆலயம் சற்று விஸ்தரிக்கப்பட்டு படிப்படியாக கல்நார் கூரையாக மாற்றப்பட்டது தேவ கிருபையினால் கூரை மாற்றத்தின் போது வருகை தந்து ஆராதனை நடத்திய மகாகனம் பேராயர் Rt. Rev. ஜேசன் S. தர்மராஜ் அவர்களால் 20.11.1993 அன்று சுமார் ரூ.7 லட்சம் செலவில் 3200 சதுரஅடி பரப்பில் காங்கிரிட் தளத்துடன் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆலயம் கட்ட அரசு அனுமதி கிடைக்க தாமதமானபோது அனுமதி கிடைக்க சபை விசுவாசி திரு. V. சார்லஸ் அவர்கள் அதற்காக பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டாலும் பணிகள் தொடங்கியபோது போதுமான நிதிவசதி இல்லாத சூழ்நிலையில் அன்றைய குருவானவர்கள் Rev. ARGST. பர்னபாஸ், Rev. ராஜா மணி, Rev. M.G. மாணிக்கம், Rev. P. தேவதாசன், Rev. K. மாசில்லாமணி, Rev. D. வில்சன் சாலமோன், Rev. I. சாமுவேல் பிரகாஷ், Rev. D.V. ஜெபராஜ் ஆகியோருக்கு தேவன் கொடுத்த ஞானத்தின் படி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அவைகளில் சில பின்வருமாறு.
1. எக்லாப் நிறுவனத்தில் கடன்பெற்று திருப்பி செலுத்தும் திட்டம்.
2. திருமண்டல அனுமதியுடன் ரசீது புத்தகங்கள் மூலம் கோவை, தூத்துக்குடி, நெல்லை, நாசரேத் பகுதி மற்றும் திருமண்டல விசுவாசிகள் மூலம் காணிக்கை சேகரிக்கும் திட்டம்.
3. மணி ஆர்டர்பாரம் மூலம் காணிக்கை சேகரிக்கும் திட்டம்.
4. பரிசுச்சீட்டு, விற்பனைவிழா மூலம் நண்பர்கள், உறவினர்களிடம் காணிக்கை சேகரிக்கும் திட்டம்.
5. அகஸ்தியர்பட்டி சபை பெண்களின் தங்க ஆபரண காணிக்கை திட்டம்.
இவ்வாறு அநேக விசுவாசிகளின் ஜெபத்தாலும், காணிக்கைகளாலும் ரூ.7 லட்சம் என திட்டமிடப்பட்டு பின்னர் ரூ.12.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட தேவனுடைய ஆலயம் 27.4.2003-ல் மகாகனம் பேராயர் Rt. Rev. Dr. S. ஜெயபால் டேவிட் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆலயம் கட்டி முடிக்கப்பட்டாலும் சபை மக்கள் ஆலயத்திற்கு கோபுரம், மண்டபம் தேவையென தேவனிடத்தில் ஜெபித்ததின் பலனாக இவைகளுக்கு 27.4.2008ல் மகாகனம் பேராயர் Rt. Rev. Dr. S. ஜெயபால் டேவிட் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஆலயத்தின் பெயரைக்குறிக்கும் தூய யோவான் திருநாள் ஆன 27.12.2009 அன்று சுமார் ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆலய முன்மண்டபம் மற்றும் கோபுரத்தின் தரைத் தளம் மகாகனம் பேராயர் Rt. Rev. Dr. J. J. கிறிஸ்துதாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இதற்கு சேகர குருவானவர் Rev. J. ஜஸ்டின் அவர்களின் முயற்சி அளவிடமுடியாது.
தொடர்ந்து சபையின் குடும்பங்கள் 100-க்கு அதிகமானதால் சபை ஊழியருக்கு ஆலய வளாகத்தில் இல்லம்கட்ட வேண்டும் என்ற சபை மக்களின் ஜெபத்தால் அன்றைய சேகர குருவானவர் Rev. J. ஜஸ்டின் அவர்களுடைய பெரு முயற்சியாலும் ஆலயத்தின் பின்புறம் கட்ட தீர்மானிக்கப்பட்டிருந்தது ஆனாலும் சபை ஊழியர் வீட்டை, சபை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலயத்தின் முன்புறம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது அப்போது சேகர தலைவராக இருந்த Rev. K. அருள்ராஜ் பிச்சமுத்து மற்றும் சபை குருவானவர் Rev. J. செல்வராஜ் அவர்களால் 28.04.2014 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டு 25.4.2015 அன்று கனம் பேராயர் Rt. Rev. Dr. J.J. கிறிஸ்துதாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த இல்லம் கட்டுவதற்கு சேகர குருவானவர் Rev. J. மதுரம் அவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டார்கள். சபை ஊழியர் வீடுகட்டுவதற்கு திரு. P. ஜெசுபால் மனோகரன், திரு. N. ஜாண்சன், திரு. K. சாமுவேல், திரு. P. தேவராஜ், திரு. P.M.D. விஜயகுமார், திரு. K. பால்பிரேம்குமார் ஆகியோர் பொறுப்பாளர்களாக செயல்பட்டார்கள்.
தற்போது Rev. K. ஸ்டாலின் பிரின்ஸ் அவர்கள் அகஸ்தியர்பட்டி சேகர குருவானவராகவும் திரு. N. ஜெபஸ்டின்ராஜா அவர்கள் சபை ஊழியராகவும், திரு. J. ராஜையா ஏசுவடியான் அவர்கள் சபை செயலாளராகவும், திரு. S. ஜாண் பொன்ராஜ் அவர்கள் சபை பொருளாளராகவும் No Person அவர்கள் ஆலய பணியாளராகவும் தேவ பணிசெய்து வருகிறார்கள்.
முன்னாள் சேகர குருவானவர்கள்
1. Rev. ARGST. பர்னபாஸ்
2. Rev. P. தேவதாசன்
3. Rev. M.G. மாணிக்கம்
4. Rev. K. மாசில்லாமணி
5. Rev. D. வில்சன் சாலமோன்
6. Rev. I. சாமுவேல் பிரகாஷ்
7. Rev. D.V. ஜெபராஜ்
8. Rev. J. ஜஸ்டின்
9. Rev. K. அருள் ராஜ் பிச்சமுத்து
10. Rev. J. செல்வராஜ்
11. Rev. J. மதுரம்
12. Rev. S. நிக்சன்
13. Rev. G. சார்லஸ்
14. Rev. ARGST. பர்னபாஸ் ஆகியோரும்
முன்னாள் சபை ஊழியர்கள்
1. திரு. கிறிஸ்டோபர் சாலமோன்
2. திரு. ஐாண் வேதமணி
3. திரு. A. சாமுவேல்.
4. திரு. A. காந்தி
5. திரு. D. டேவிட் ஞானசிகாமணி
முன்னாள் சபை செயலாளர்கள்
1. திரு. J. தேவதாசன்
2. திரு. A. சுகுமார் பால்ராஜ்
3. திரு. A. இம்மானுவேல் மாணிக்கம்
4. திரு. K. மனோகரன்
5. திரு. P. தேவராஜ்
6. திரு. P. பாபு
முன்னாள் சபை பொருளாளர்கள்
1. திரு. J. ராஜையா ஏசுவடியான்
2. திரு M. மனுவேல்ராஜ்
3. திரு. S. செல்லப்பன்
4.திரு. P.M.D. விஜயகுமார்
முன்னாள் ஆலய பணியாளர்கள்
1. திரு. R. ஜோசப்
2. திரு. S. ஜெயச்சந்திரன்
3. திருமதி. T. ஜோதிபுஷ்பம்
ஆகியோரும் தேவகிருபையினால் தேவபணியை சிறப்பாக செய்துள்ளனர், 1990-ம் ஆண்டு 9 குடும்பங்களுடன் ஒரு ஜெபக்குழுவாக துவக்கப்பட்டு 1993-ல் 33 குடும்பங்களுடன் உதயமான மிகச்சிறிய அகஸ்தியர்பட்டி தூய யோவான் ஆலய திருச்சபை இன்று 190 குடும்பங்களுடன் ஒரு ஆவிக்குரிய திருச்சபையாகவும், விசுவாசிகள் மற்றும் தேவையோடு வருபவர்களின் வேண்டுதல்களுக்கு பலன் அளிக்கிற ஆலயமாகவும் வளரும் திருச்சபையாகவும், ஆசீர்வாதமான ஸ்தலமாகவும் ஆசிர்வதிக்கிற தேவனுக்கே எல்லா கனமும், மகிமையும் உண்டாவதாக ஆமென்.