1986-ம் ஆண்டு அம்பாசமுத்திரத்திற்கும் விக்கிரமசிங்கபுரத்திற்கும் (8கி.மீ. தூரம்) மையப்பகுதியில் அதாவது அகஸ்தியர்பட்டி, பொன்னகர், கோபால்நகர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவ விசுவாசிகள் 4 கி.மீ. தொலைவிலுள்ள விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் போன்ற பகுதியிலுள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களுக்கு ஆராதனைக்குச் சென்று வந்தனர்.இந்நிலையில் சகோதரர் G. செல்வின் ஜோயல் அவர்கள் அகஸ்தியர்பட்டி பொன்னகர், கோபால் நகர் மற்றும் விநாயகர் காலனியில் வசித்து வந்த கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவரையும் ஒன்றினைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அக்கூட்டத்தில் ஒரு சிலர் Independent Church ஆரம்பிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்கள் ஆனாலும் அநேகம்பேர்கள் அது சரிவராது, நமது பின் சந்ததியினருக்கும் கல்யாணகாரியங்களுக்கும் சி.எஸ்.ஐ. யோடு இனணந்து செயல்படுவது தான் நல்லது என்ற கருத்து வலுப்பெற்றது. அதைத் தொடர்ந்து. திரு. G. செல்வின் ஜோயல் அவர்கள் கோயம்புத்தூரில் பணி புரிந்து கொண்டிருந்த படியால், இந்த பணியை தொடர்ந்து செயல்படுத்த பொன்னகர் வந்து சகோதர் திரு. J. ராஜையா ஏசுவடியான், திரு. A. சுவாமிதாஸ், மற்றும் திரு. A. சுகுமார் பால்ராஜ் அவர்களிடம் ஆலோசனை நடத்தினார், உடனடியாக கனம் Rev. ARGST. பர்னபாஸ் அவர்களுக்கு ஒரு மனு தயாரிக்கப்பட்டு அதில் கோபால் நகர் பகுதியில் உள்ள ஆக்ஸ்போர்டு மலலையர் பள்ளிக் கட்டிடத்தில் ஞாயிறு ஆராதனை நடத்த, ஒப்புதல் கேட்டு அனைத்து விசுவாசிகளும் கையெழுத்திட்டு கொடுக்கப்பட்டது.
கனம் Rev. ARGST. பர்னபாஸ் அவர்கள் சபை மன்றத்திலும், திருமண்டலத்திலும் அனுமதி பெற்று சபை ஆரம்பிக்க மிகுந்த மகிழ்ச்சியோடு அனுமதியளித்தார்கள்.
புதிய ஆலய ஆராதணை 27.06.1993 அன்று ஞாயிறு மாலை 7.00 மணிக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. மேற்குசபை மன்றத்தலைவர் Rev. P. தேவதாசன் அவர்கள் ஆசீர்வாத செய்தி (ஆதி.12-22) அளித்து ஆசீர்வதித்து ஜெபித்தார்கள். அந்த திருவிருந்து ஆராதனை முடிந்தபின்பு முதல் சபைக் கூட்டம் சேகர செயலாளர் சகோ. D. தனராஜ் அவர்கள் ஜெபித்து ஆரம்பமானது. சேகர குருவானவர் Rev. ARGST. பர்னபாஸ் அவர்கள் புதிய திருச்சபை ஆவிக்குரிய வளர்ச்சி, சரீர வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியும் அடைய ஆலோசனை வழங்கினார்கள்.
More…